Thursday, January 13, 2022

"நன்றாக பேசி! நஞ்சாக பழக கூடியவர்கள்!" - பூபதி கார்த்திகேயன்

நெருங்கி பழகக்கூடிய நண்பர் நாங்கள், இருந்தும் ஜாதியின் கவுரவத்தை எந்த இடத்திலும் கைவிட முடியாத நண்பர் அவர், ஜாதி இருக்கத்தில் உடைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து சமூக விடுதலைக்காக வேலை செய்கிற நான்.  இருவரையும் ஒரு புள்ளியில் நிறுத்தியது எங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்கிற ஓட்டம்தான்.
பழைய வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்ததால் , பணம் தொடர்பாகவும் பயணம் தொடர்பாகவும் வாகன காப்பீடு நிறுவனங்களை,  மற்றும் வாகனங்களின் தரக்கட்டுப்பாடு சான்று வாங்கவும், தனியார் பைனான்ஸ் நிறுவனங்களை. புதுக்கோட்டை, தஞ்சாவூர் மன்னார்குடி,பட்டுக்கோட்டை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு அடிக்கடி சென்று சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க வேண்டி இருப்பதாலும் அடிக்கடி ஒன்றாக வெளியூர் சென்று வருவது வழக்கம், அந்த அளவுக்கு தொழில்முறை நண்பர்கள்.,நன்றாக பேசி!  பழக கூடியவர்! ஒரு முறை இதேபோல தைமாதத்தில் பொங்கல் விழா பாரம்பரிய கலாச்சாரம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தபோது, தனது கிராமத்தில் மாட்டுப்பொங்கலன்று ஆடு மாடுகளை பறையடித்து அவிழ்த்து விட வேண்டும் என்கிற சம்பரதாயம் இருப்பதாலும் அதற்காக என்னிடம் பறை வாசிக்கக்கூடிய தேவையை உணர்த்தி... முன்னாடியெல்லாம் பறை அடிக்க ஆள் கிடைப்பார்கள் அப்பொழுது அதற்காக விலை ஏதும் கொடுக்க வேண்டியதில்லை என்றும் அப்படி பறையடிக்க வருபவர்களுக்கு அன்று  சோறும் குழம்பு கரும்பு ஒரு மொழமும் வீட்டில் செய்த பலகாரங்களை சிலவற்றையும் கொடுத்து அனுப்பினால் போதும் என்றும்., தற்பொழுது அந்த சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் நன்கு படித்து விட்ட காரணத்தால்  தனது தந்தைகளை பறையடிக்க செல்லக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்து வைத்திருப்பதாலும் தற்போது பறை வாசிக்கக் கூடிய ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது என்கிற செய்தியை என்னிடம் வருத்தத்துடன்  பதிவு செய்தார்... ஏன் பறையடிக்காமல் மாட்டை அவிழ்த்து விட முடியாதா என்று கேட்டேன்... இல்லை அதுதான் காலங்காலமாக இருந்து வருகிறார் பழக்கவழக்கம் என்றார்... இதற்கு எப்படியாவது ஒரு வகையில் உதவி செய்திட வேண்டும் என்கிற வகையில்,... ஆள் கிடைக்கவில்லை என்றால் என்ன எனது கிராமத்துக்கு அருகாமையிலேயே எனது உறவினர்கள்  பறை ஒன்றுக்கு  தினசரி 20 ரூபாய்க்கு  பறை வாடகைக்கு விடக்கூடிய நபர்கள் இருந்ததை நினைவில் வைத்திருந்தது  அப்போது ஞாபகம் வந்ததால்...  நான் பறைகளை  வாடகைக்கு வாங்கி தருகிறேன் நீங்கள் பறை அடித்து மாடு அவிழ்த்து விட்டால் என்ன என்று கேட்ட பொழுது! ஆத்திரம் தாங்காம நண்பரின் இருதயம் முழக்கு போட்டு கொட்டு அடித்துக்கொண்டிருந்த சத்தம் கேட்க முடிந்தது...

No comments:

Post a Comment

AI replacing labour and the idea of a "commune"

Written by Aakash A coworker and I were discussing the state and its political parties earlier, and our discussion eventually moved on to th...