Saturday, December 4, 2021
வெள்ளை நிறத்தொரு பூனை - பூபதி கார்த்திகேயன்
வெத்தலை கறைபடிந்த பற்கள்., ஒடிசலான தேகம், எண்ணை பூசாத தலை ,அதே சாயலில் 13, மற்றும் 4 வயசுல இரு பெண் குழந்தைகள் இருவரும் அவர் மகள்கள் என்பதை முகச் சாயல் அடையாளம். பேருந்துக்குள் அவர்கள் ஏறியதுமே பூனை முனங்கள் சத்தம் துவங்கியது, 3 பேர் அமரும் இருக்கை என் அருகில் அமர்ந்து கொண்டார்கள்... பூனையின் முனகல் காதில் ஹெட்போன் மாட்டியவர்களை தவிற சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை அனைவரின் கண்களும் ஒரு பையை நோக்கி கவனிக்க பேருந்து நகர துவங்கியதும் உர சாக்கு பைக்குள் இருந்த பூனை திடீரென வெளியே குதித்து அங்கும் இங்கும் ஓடியது... பேருந்துக்குள் மெல்லிய சிரிப்பலை நல்ல வேளை வெளியே தாவி விட வில்லை, தனக்கருகே எதிர்புறம் இருக்கை அடியில் ஒழிந்திருந்த பூனையை மூத்த மகள் பிடித்துவிட்டார்!... எதிரே தாயுடன் அமர்ந்திருந்த எனது மகள் சோட்டு குழந்தைகள் பூனையை ரசித்துக்கொண்டே வந்தார்கள்... எங்க போகனும் என்று கண்டெக்டர் அலட்சியமாக கேட்ட சடுதியில் கரம்பக்குடி யூனியன் எறங்கணும் ரெண்டு குடுங்க என்றார்... புதுபட்டி ஸ்டாப் வரும்போதெல்லாம் பூனை குட்டியும் பயணிகளும் இயல்புக்கு திரும்பியிருந்தனர்... பெரியாத்து பாலமும் நரியாத்து பாலம் வரும்போதெல்லாம் பயணிகள் அவர்கள் இறங்கவேண்டிய நிறுத்தங்களில் தங்கள் பொருத்தி பார்த்துக்கொண்டு தயாரானார்கள்... யூனியன் பஸ்ஸ்டாப் வந்ததும் எம்மா பூனை குட்டி எறங்கு என்று கண்டெக்டர் சொன்னபோது பேருந்துக்குள் மீண்டும் ஒரு சிரிப்பு சத்தம்... பூனையை எங்கம்மா எடுத்துட்டு போறிங்க என்று கேட்டேன்... மகள் வாக்கப்பட்ட ஊரில் எலித் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் அதை ஒழித்துக் கட்ட பூனை கொண்டு செல்வதாக சொன்னார்!
Subscribe to:
Post Comments (Atom)
AI replacing labour and the idea of a "commune"
Written by Aakash A coworker and I were discussing the state and its political parties earlier, and our discussion eventually moved on to th...
No comments:
Post a Comment